Tuesday, 30 October 2012

உனக்காக... தோழா!


எங்கோ இருந்தாலும்...
இிங்கே  நட்பாணோம்..!

நட்பில் இருவகை..,
உள்ளம் உணரும் நட்பொன்று...
கண்மூடித் தனமாய் அன்பு காட்டும் நட்பொன்று..!!

முதலாம் நட்பே நிலைத்து நிற்க்கும்...!!
நம்மைப்போல்..!!
புரிதலில்தான் நட்பு நிலைக்கும்..!!




இருவரும் முகம் பார்த்ததில்லை...
பார்க்கும் வாய்ப்பையும்..
எதிர்நோக்கவில்லை...!!

தோழனாய்  அறிமுகமாகி..!!
சகோதரனின் பாசம் கொண்டு...
நீங்காமல்   நிலைக்கிறது ..
உன் அன்பு..!!



 நீ அறிவாயோ.. இல்லையோ..?

என் துன்பங்களுக்கு மருந்தாய்
நீ இருந்தாய்..,
சாதாரணமாக நீ கூறும்..
வார்த்தைகள்...
என் துன்பங்கலுக்கு
அறுதல் தரும் !!



உன்னை விட பெரியவள் நான்..!!
என்னை விட உயர்ந்தவன்     நீ..!!

இருக்குமோ..?
நம்மைவிட  சிறந்த தோழமை..!!
நண்பா...!!







Sunday, 30 September 2012

கண்களைக் கண்டாய்..!


விழி கூறும்
மொழி அறிந்தவர் யாரோ?

பெண்மை பேசும்..
மொழி புரிந்தவர் யாரோ?

புரிந்தவர் விலகி விடுவர்..!
புரியாமல் இருப்பதே நலம்..!

விழி உண்மை
கூறிவிடும்..!!

முகம்....
மனதை காட்டிவிடும்..!!

வாய் பொய் மட்டுமே
உரைக்கும்..!!

நம்பாதே.. பெண்ணின்
வாய்ப்பேச்சை..!!

மனதை நம்பு..!

Friday, 28 September 2012

கூழாங்கல்


                                               கூழாங்கற்களின் தினம்...
கடந்து செல்வதைத் தவிர ..
எதுவும் பெற்றுத் தராத ...பாதை
ஓய்வு அற்றது..!!


நதியில் கரைபுரளும் ..
கூழாங்கற்கலுக்கு...
நதியிடம் சொல்லயெதும் இல்லை




 நதியின் பாதையில் சென்று ...

கடலைச்சேர்வதுதான்...!!




வாழ்வும் அப்படியே..!!

Thursday, 6 September 2012

கடற்கரையிலே...

கடற்கரையிலே...
நான் இருந்தேனே..!

எதற்க்காக  நீயும்
வந்து  நிற்க்கிறாய்?

கடல் அறியுமோ...
காதலின் ஆழத்தை..!

காதலும் அறியுமோ...
என் உள்ளத்தை..?

 நான் கட்டிய
கடற்கரை மணல்வீடு...
அலையால் அழிவது போலே...!

காற்றும்  கதறியது..
கரை புரளும்...
அலையை கண்டு..!!

அலையால்...
கண் இமைக்கும் நொடியில்...
அள்ளிக்கொண்டு போன..
என் மணல்கோட்டை(மனக்கோட்டை)..,

மீண்டும்...
கட்டலாகாதோ..?
மணல்  கரைந்தோடலாம்..
கடல்  கரையாதே, அழியாதே!!



கனவு கரையலாம்..!!
காதல் கரையது..!!

Sunday, 26 August 2012

பைத்தியக்காரன்.. இவரா?


தாரபுரம் பகுதியில் வாழும் அனைவரும் 
அறிந்த ஒரு நபர்..!!

இருப்பது குப்பைமேடாயினும்..
கையில் எப்பொழுதும்..
செய்தித்தாளோடுதான் இருபார்..!!

தாரை பேருந்து  நிலையம்,
தாலுக்கா ஆபிசு, அண்ணா சிலை....
இப்படி பல இடங்களில் காணலாம்..!!

தன் மடியில் எப்பொதும் 
ஒரு மூட்டை வைத்திருப்பர்...
அதில் முழுக்க புத்தகங்களும்,
செய்தித்தாள்களும் தான்..!!

இவரை பற்றி அறிய ஆவால்..
கொண்டேன்... 
பல்வேறு கதைககள்..
உலவுகிறது...!!

பைத்தியம் யார்...?
இவர்கள்...
அல்ல... 

என்பது மட்டும் உறுதி!



Saturday, 25 August 2012

குழந்தைப்பருவம்


மகிழ்ச்சி தவழும் பருவம்...
மானிடம் இழக்கும் பருவம்...
மறுமுறை வாழநினைக்கும் பருவம்...!



சோகம் என்பதை உணாராது..
சுகம் என்பது என்ன ?
என்பதையும் அறியா பருவம்...!


வாழ்நாள்  முழுவதும்
வேண்டும்....
மழலையின் மனமும், குணமும்..
தருவாய் இறைவா..~!

கல்லூரி !



மறக்க முடியாமல்
தவிக்கிறேன்...!

நட்பின் பிரிவுகளையும்,
கல்லூரி கலாட்டாக்களையும்...!
எத்திசை தேடியும்
அமையவில்லை...
நமது நட்பு

தோழிகளே!


சிவன் மலை

சொல்லாமல் சொல்லும்...
பல்வேறு கதைகள் !

எத்தனை கனவுகள்,
எத்தனை கண்ணிர்கள்..
எத்தனை வேண்டல்கள்..
கோவில் படிகள்,
ஏறும் அவ்வேளையில்...

மறவேன்!

Thursday, 17 May 2012

காதல்


 முகத்தை மூடி
பார்வையால்..
 வீ ழ்த்தும்  யுத்தம்..!

விலகி ஓடினாலும்...
துரத்தி வந்து...
மனதை பரிக்கும்..
பாசக்கயிரு...!!



குடை இருந்தும்
உடல் நனைக்கும்...
கண்ணீர் பேரலை..!!

 நினைவை -- இழந்து...
 நிகழ்காலம் மறந்து..
 நித்திரையை ஒழிக்கும்...
ஒர்   நோய்.!!



விழ்ந்து விடதே..!!
வேதனை  நிச்சயம்......!!