அன்று ...
அவள்
இமைகள்..மூடியும்..
உறக்கம் வரவில்லை..!!
நினைவுகள்...
விடியலை... நோக்கியே...
நகர்ந்தது...!!
ஈரொன்பதுஆண்டுகள்
இதுவரை..
செல்லாத...
தனிமை பயணம்...
அடுத்த நாள்...
நிகழவிருப்பதே...
யார் அவன்...!!?
கரிய மேகத்தினுள்..
ஒளிரும்..மின்னலின்..
சிரிப்பும்..!!
இரவும் ..
பகலும்...
இமைக்காமல்..
இயக்கமும்...!!
இரவும் ..
பகலும்...
இமைக்காமல்..
இயக்கமும்...!!
வானத்து...
நிலவை-போல்
தனிமையும்... ஆட்கொண்டவன்...!!
மென்பொருள்...
சலித்துப்போகவே...
மனம் விரும்பும்...
வேளாண்மை...
வேண்டும் என்பவன்..!!
பாசத்தின்...
வாயில்தனை...
பக்குவமாக...கையாலும்
பண்பாளன்..!!
யார் அவள்..!!
தனிமையை..
தனதாக்கிக் கொண்டவள்..!!
உலகின்..பன்முகம்,
உணராத..
அன்பின் முகத்தவள்..!!
கவலை -என்பதை
கனவிலும்..
காணாத பறவையவள் ..!!
ஆயிரம் பேர் ..
கூடும்... பேருந்து நிலையம்.!!
அலைமோதும்...
கண்களுடன்....
தேடியே... நிற்கிறாள் ..அவனை!!
கணினியின் தேடலைவிட..
கண்களின் தேடல்...
கவியின் கவிதையை-போல்
புரியவில்லை - அவளுக்கு..!!
முதல் சந்திப்பு...!!
"பார்ப்பேனோ..?" - என
பரிதவித்தாள்..!!
பார்த்துவிட்டள்.. அவனை!!
அவனும் நோகினான்..
அவளும் நோகினாள்..
காதல் தான் பூக்குமோ..??
இல்லை...
உன்னதமான...
நட்பும்.~~.பூத்ததே..!!







