Friday, 10 May 2013



என்னில் நீயென்று
உன்னில் நான் என்று
கண்ணிலே கவிகொண்டு
கலந்திருந்தேன்
காதலில் உயிர் கொண்டு
அன்பென்றால் நீயென்று
அரவணைத்தேன் என் உயிர் கொண்டு
உன் உள்ளம் எனக்கென்று
எழுதினேன் உயில் 
என் உயிரும் உனக்கென்று 
என்னை நீ வெறுத்தாலும்
என்னை நீ பிரிந்தாலும்
என்னை நீ மறந்தாலும்
என்னை நீ அளித்தாலும்
என்னை நீ சிதைத்தாலும் 
என் உள்ளம் உன்னையே நேசிக்கும்
என் இதயம் உனக்காய் துடிக்கும்
என் சுவாசம் உனக்காய் சுவாசிக்கும்
என் உயிரும் உனக்காக உடலில் இருக்கும்
என் உயிர் பிரியும் போது
என் உடல் உனக்குரியதாகதான் இருக்கும்.


உதயா

Monday, 25 February 2013

என் இந்த மாற்றம்?


 நீதானோ ?
பாரதி சொல்லும் சொப்பனமோ?


என் உயிரே... என் உயிரே..!
வா அருகே என் ஆருயிரே !

 நீ தானோ?
கண்ணா நீதானோ...



ஏன் வந்தாய் ?
ஏன் தந்தாய் தாகம்?
இது என்ன மாயம் அன்பே?
நீ இருந்தாய்...


வருவாய்...!!
இளம் சாரல் போல 
தவழ்ந்து வந்து என்னை தாக்க....

தருவாய்  உன் மோகன இதழில் ..!!