Sunday, 4 December 2011

அந்தரங்கம்....!! நுழையாதே..


உன்....
கனியிதழ் கசியும்
கனிமொழிகளை
என்னிடம் சேர்க்கும்
கைபேசி...!!

என் அறையில்
இருக்கும்
உன் நினைவின்
பரிசுகள்.....


 என்னோடு
இருக்கும்
உன் புகைப்படம்..




முகம் பார்க்கையில்
கண்ணாடி-முன்
தோன்றும்...உந்தன்
பிம்பம்...

நான்
உறங்குகையில்
என்னோடு
உறங்கும்
உன் நினைவுகள்...




இவைகளுக்கு....
நான் அளித்த..
முத்தங்களின் 
ஈரம்.. இன்னும்..
காயவில்லை...!!  



நாம் நடந்த..
பாதைகள்..!
அமர்ந்த ...
இடங்கள்...!
ருசித்த  உணவுகள்...!
நான் ரசித்த -உன்
செயல்கள்....


இவைகளின்..
நினைவுகளும்-என்
கண்களைவிட்டு...
 நீங்கவில்லை...!!

 நீ கொடுத்த..
மல்லிகை...பூ..,
காய்ந்தாலும்...
இன்னும்-உயிர்
வாழ்கிறது-என்..
புத்தக...
பக்கங்களிள்.. 




நீ பேசிய..
வார்த்தைகளின்...
ஓசை..-என் 
காதினில்..
கேட்டுக்கொண்டே...
இருக்கும்  நிலை
மாறவில்லை...



என்னோடு...
இருப்பேன்- என்றாய்..!!

வாழ்வில் - என்னை 
இழக்கமாட்டேன்..என்றாய்.!!

என்னோடு - இருப்பதே 
ஆனந்தம்..என்றாய்.!!



இப்படி...
இருக்கையில்...


                                
                                 நீ மணப்பெண்...
                                 பார்த்துவிட்டு 
                                 வந்த.. சேதியை..
                                 என்னுடன் - 
                                 பகிர்ந்துகொள்கிறாயே...!!
                                 
                                 என் விருப்பம்
                                 கேட்டு நிற்க்கிறாயே..!! 
                                 என்ன செய்வேன் - நான்!!?
                               

                                 உதடுகள்..
                                 உன்னிடம்...
                                 புன்னகைத்தாலும்...
                                 என்  -கண்ணில்..
                                 காதல்...கரையத் 
                                 தொடங்கிவிட்டது...!!    
                                 என் அன்பு - மாறவில்லை..!!



                                
என் காதலை-விட
உன் நட்பிற்கு...
வல்லமை - அதிகம் போலும்!!!!
தொடரட்டும் - நம் அன்பு
நட்பாக.....~~~
நண்பணே....!!

















..